வவுனியா நகரசபையினரினால்
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகளவில் வருகைதரும் வவுனியா தெற்கு பிரதேச செயலகம் வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் பிரதேச செயலக கட்டிடம் , அலுவலகங்கள் , மாநாட்டு மண்டபம் என்பன மருந்தும் வீசி தொற்று நீக்கம் மேற்கொள்ளப்பட்டது