வவுனியாவில்
கொவிட்-19 இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா இளைஞரணித் தலைவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான விக்டர்ராஜ் வெளிமாவட்ட யாசகர்கள் தொடர்பில்,
வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சி.சுபாஜினி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதனையடுத்து வெளி மாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகம் செய்யும் நிலையில் குடியிருப்பு குளக்கரைப் பகுதியில் தங்கியிருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 10 பேரை சந்தித்த மேற்படி உறுப்பினர்கள்,
அவர்களுடைய பிரச்சனைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாசகத்தில் ஈடுபட்ட வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆடைகள் வழங்கப்பட்டு, அவர் குடியிருப்பதற்கான காணியும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜ் தெரிவித்தார்.