வவுனியா பொலிசாரால் கொரோனா தொடர்பில் விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம்வவுனியா,பொலிசாரால் விசேட கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (28.10) காலை 10.00 மணிக்கு இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேரூந்துகளிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

சரியான நேரத்தில் சரியாக மாஸ்க் அணிந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களே இவ்வாறு ஒட்டப்பட்டன. அத்துடன் பேரூந்து நிலையம் மற்றும் பேரூந்து என்பவற்றுக்கும் கிருமி நீக்கும் மருந்துகள் பொலிசாரால் விசிறப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா , வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே , வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்கா மற்றும் பொலிசார், இளைஞர் சேவை பாராளுமன்றத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

hey