வவுனியா மாவட்டத்தில் கைவிடப்பட்ட 105 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன்,மேலும் 83 கைவிடப்பட்ட குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யு த்தம் காரணமாகவும், மக்கள் குளத்து காணிகளைஅ பகரித்து குடியேறியமை காரணமாகவும் வவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் அ ழிவடைந்துள்ளதுடன், பல குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் வவுனியா மாவட்டத்தில் 105 கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது விவசாயிகள் மற்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள 83 குளங்களையும், 29 அணைக்கட்டுக்களையும் பு னரமைப்பு செய்து நீரைத் தேக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கமநல அபிவிருத்தி தி ணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.