வவுனியா – நெடுங்கேணி வர்த்தகர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைவவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் வீதி ஒப்பந்த பணியாளர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதார திணைக்களத்தினர் சமூக பரவலை தடுப்பதற்காக கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெடுங்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுமாறு சுகாதார பிரிவினர் அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நெடுங்கேணி பிரதேச மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுவதுடன், வீதி அபிவிருத்தி பணியினை மேற்கொண்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

hey