வவுனியா நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த வர்த்தக சங்கத்தினரினால் வெப்பத்தை அளவிடும் கருவிகள் வழங்கி வைப்புகோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை அளவீடும் கருவிகள் நான்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நான்கு கருவினையும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா , செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் , பொருளாளர் என்.செல்வரட்ணம் இணைந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களிடம் கையளித்தனர்.

நாளை தொடக்கம் வவுனியா மாவட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் வவுனியாவிற்குள் நுழையும் பகுதிகளான ஈரட்டைப்பெரியகுளம் , பூவரசங்குளம் , ஓமந்தை , மாமடு ஆகிய பகுதிகளில் குறித்த கருவியின் பரிசோதனையின் பின்னரே வவுனியா மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொரோனா தொற்று நோயாளியினை இலகுவாக இனம்கான முடிவதுடன் வவுனியா மாவட்டத்தினுள் கொரோனா தொற்று பரவுவதையும் தடுக்க முடியும்.

hey