வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 25 பேரின் முடிவுகள் நேற்று (21.10) வெளியாகியிருந்தன. அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் இருவரின் பிசீஆர் முடிவுகள் இன்று (22.10) மதியம் வெளியாகின. அதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நெடுங்கேணி பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரு தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டவர்களின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.

hey