வவுனியாவில் 82 பேர் சுயதனிமைப்படுத்தலில் : அச்சத்தில் வவுனியா மக்கள்வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அவர்களுடன் பணியாற்றிய 82 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 25பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று (20.10) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் படி 3பேருக்கு கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெடுங்கேனி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 82 நபர்களில் 60 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலும் மிகுதி 22 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த பிற இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 நபர்களிடமும் நாளையதினம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey