செட்டிகுளத்தில்
செட்டிகுளம் பேருந்து தரிப்பிட மத்தியில் நீண்ட காலமாக நின்ற பாலைமரம் கடும்காற்றில் சரிந்து வீழ்ந்ததில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பேருந்து சேதம் தெய்வாதீனமாக பயணிகள் உயிர்தப்பினர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணகாலநிலையை அடுத்து ஏற்பட்டுள்ள காற்றுக்காரணமாக இன்று செட்டிகுளம் பேருந்து தரிப்பிடத்தில் அரச பேருந்து ஒன்றின் மீது பாரிய பழைமை வாய்ந்த பாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது குறித்த பேருந்தில் மக்கள் இருக்கவில்லை என சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
பல வருடத்திற்கு மேல் பழமையான குறித்த மரம் கடுமையாக வீசிய காற்றுக்காரணமாக முழுவதுமாக முறிந்து வீழ்ந்துள்ளது.
பிரதேச செயலக ஊழியர்களினதும் பொதுமக்களும் இணைந்து பொலிசாரின் ஒத்துழைப்புடன் வீழ்ந்துள்ள மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.