வவுனியாவில் பெண்ணின் மலவாசலில் இருந்து 50 சென்ரி மீற்றர் துணி மீட்புவவுனியாவில்

வவுனியாவில் பெண் ஒருவரின் மலவாசலில் இருந்து சுமார் 50 சென்ரி மீற்றர் நீளமான துணி மீட்கப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா வைத்தியசாலையில் இன்று (12.10) கு ழப்ப நிலை ஏற்பட்டது.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பெண் ஒருவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறுவைச் சிகிச்சை மூலம் வவுனியா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண் வீட்டில் மலம் கழிக்கும் போது மலவாசல் ஊடாக கடந்த சனிக்கிழமை துணி வந்துள்ளது. மீண்டும் நேற்று (11.10) ஞாயிற்றுக் கிழமையும் துணி வந்துள்ளது.

இவ்வாறு சுமார் 50 சென்ரி மீற்றர் நீளமான துணி வந்துள்ளது. இதனையடுத்து தனியார் வைத்தியசாலைக்கு சென்ற குறித்த பெண் அவ் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற பெண் மற்றும் அவரது கணவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அ றுவைச் சி கிச்சை த வறின் காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக வைத்தியர்களிடம் தெரிவித்தனர்.

வைத்தியர்கள் அதனை மறுத்தமையால் அங்கு சிறிது நேரம் கு ழப்பம் ஏற்பட்டது. கு ழப்பத்தையடுத்து, ஸ்கானிங் பரிசோ தனைக்காக குறித்த பெண் வவுனியா வை த்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

hey