Monday, March 10, 2025

39 வயதாகியும் திருமணம் செய்யாமலேயே இருப்பது ஏன்..? நடிகை சதா ஓபன் டாக்

- Advertisement -
- Advertisement -

தமிழில் 2002ம் ஆண்டு ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமான ஜெயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சதா. எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி 2018ம் ஆண்டு தனியார் வங்கியில் கடன் வாங்கி டார்ச் லைட் என்ற படத்தில் நடித்து தயாரித்தும் இருந்தார்.

39 வயதான நடிகை சதா இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம்.திருமணம் செய்பவர் புரிந்து கொள்ளலாம் அல்லது புரியாமல் இருக்கலாம். நான் வனவிலங்குகளை விரும்புகிறேன்.

நான் விலங்குகளை நேசிக்கிறேன்.நான் திருமணம் செய்து கொண்டால், என் ஆசைகளைத் தொடர முடியாமல் போகலாம். இருப்பினும்,பல திருமணங்கள் வெற்றியடைவதில்லை. பலர் பிரிந்து செல்கின்றனர். அதனால் தான் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular