80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ராதா. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதன்பின் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை ராதாவிற்கு இரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகைகள் என்பதை நாம் அறிவோம். தங்களது தாய்யை போலவே திரையுலகில் கால்பதித்த இருவரும் அவரை போலவே மாபெரும் நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
நடிகை ராதா அவ்வப்போது தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது மகன் விக்னேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
நடிகை ராதாவின் மகன் விக்னேஷ் தனது பட்டப்படிப்பை வெளிநாட்டில் முடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட மகிழ்ச்சி நிறைந்த தருணத்தின் புகைப்படங்களை தான் நடிகை ராதா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ராதாவின் மகனா இது! தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.