பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். முதல் படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த அதிதி மாவீரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாகிறது.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த மண்டேலா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதனால் மாவீரன் படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து ஏற்கவே பார்த்தோம். இந்நிலையில், தற்போது இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அதிதி ஷங்கர்
வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தில் நடித்துள்ள நடிகை அதிதி ஷங்கருக்கு ரூ. 25 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.