1999 இல் தமிழில் வெளிவந்த ‘சங்கமம்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியவர் நடிகர் ரகுமான். இத்திரைப்படத்தில் வரும் ‘மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்’ என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ரகுமான். இவர் 1984 இல் வெளிவந்த கூடாவிடே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஏ ஆர் ரஹ்மான். இவர் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மதுராந்தகச் சோழன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தற்பொழுது மலையாளத்தில் ‘சமாரா’ என்ற திரைப்படத்திலும், தமிழில் அஞ்சாமை, நிறங்கள் மூன்று போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் நடிகர் ரகுமான் கன்பத் என்ற திரைப்படத்தில் அமிதாப்பச்சன் பிள்ளையாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் 56 வயதாகும் நடிகர் ரகுமான் அஜித் பட நடிகையான பாவனா உடன் இணைந்து நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது.
இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அஜித்தின் ஏகன், ஜெயம் ரவியுடன் தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபலமான நடிகை பாவனா, இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகவும் ரஹ்மானுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏபிகே சினிமாஸ் பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறது.