Monday, March 31, 2025

அனிகாவா இல்லை நயன்தாராவா.. புகைப்படத்தை பார்த்து கன்பியூஸ் ஆன ரசிகர்கள்

- Advertisement -
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார் நடிகை அனிகா. அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் தான் அனிகாவிற்கு நல்ல குழந்தை நட்சத்திர நடிகை என பெயரை வாங்கி கொடுத்தது.

இப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா மலையாளத்தில் வெளிவந்த ஓ மை டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

18 வயதில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த அனிகா அப்படத்தில் இடம்பெற்ற சில நெருக்கமான காட்சிகளால் சர்ச்சையிலும் சிக்கினார். மேலும் தற்போது பி டி சார், King of Kotha ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வைரலாகும் நடிகைகளின் புகைப்படங்களில் கண்டிப்பாக அனிகாவின் புகைப்படங்களும் இடம்பெறும். அந்த வரிசையில் சமீபத்தில் அனிகா சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ‘லிட்டில் நயன்தாரா, இது அனிகாவா இல்லை நயன்தாராவா’ என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அனிகா வெளியிட்ட புகைப்படங்கள்..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular