ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்கள் ஏன் திடீரென பிரிகிறார்கள் என ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இரு குடும்பங்கள் பல முயற்சிகள் செய்தும் இருவரும் தங்களது முடிவில் இருந்து மாறவில்லை. விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தனுஷ் கேப்டன் மில்லர், D50 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதே போல் மறுபக்கம் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இளம் நடிகரை ஐஸ்வர்யா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அந்த இளம் நடிகர் யார் என இதுவரை தெரியவில்லை. சென்னையில் உள்ள ரேசர்ட் ஒன்றில் தனது காதலனுடன் ஐஸ்வர்யா இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.