Monday, March 31, 2025

56 வயதிலும் குறையாத அழகு… எந்த கிசுகிசு சர்ச்சையிலும் சிக்காத ஒரே நடிகை..! தற்போதைய நிலை என்ன..?

- Advertisement -
- Advertisement -

நடிகை நதியா தனது 56 வயதிலும் அட்டகாசமான அழகுடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.1980ல் இளைஞர்களின் மனதில் கொடி கட்டி பறந்த நதியா தற்போதும் இளமையாகவே காணப்படுகின்றார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வலம் வந்த இவருக்கு 1984ம் ஆண்டும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

பூவே பூச்சூடவா படத்தின் மூலம் 1985ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை நதியா, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.அன்புள்ள அப்பா படத்திற்கான சிறந்த நடிகையாக விருது பெற்ற இவர், 1988ம் ஆண்டு ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளில் தனது வாழ்க்கையை பயணித்தார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பின்பு 2007ம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி வந்த நதியா, தாமிரபரணி, சண்டை, பட்டாளம் உள்ளிட்ட படங்களில் காட்சியளித்திருந்தார்.தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஒப்பந்தமாக தொடங்கிய இவர் சமீபத்தில் வெளியான ராம் போத்தினேனியின் தீ வாரியர் படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நதியா.

தனது கதாபாத்திரம் வலிமையானதா என்று பார்ப்பதுடன், படுக்கையறை காட்சி என்றால் நடிக்கமாட்டேன் என்று பல கண்டிஷனைப் போட்டு, எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காத நடிகையாக வலம் வந்தார்.

இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடும் பழக்கத்தை கொண்ட இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular