ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் பிரபலங்கள் சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பினை பெற்று வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் வெளிநாட்டு பெண்ணாக கலந்து கொண்டு பிரபலமானவர் நிவாஷினி. சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண்ணாக ரசிகர்களை ஈர்த்த நிவாஷினி, அசல் கோளாறுடன் நெருக்கமாக இருந்து சர்ச்சையில் சிக்கி சில நாட்களிலேயே வெளியேறினார்.
நிகழ்ச்சிக்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிவாஷினி சமீபத்தில் விஜே பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார்.
கிளாமர் அடையணிந்து நிகழ்ச்சியில் வந்து அனைவரையும் கவர்ந்தும் வந்தார். மேலும் சேலையில் கவர்ச்சி போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.