நடிகை ராதிகா சரத்குமார் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ராதிகா சரத்குமார் வலம் வருகிறார். இவர் தமிழில் 1978ம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகர் பிரதாப் போத்தன் மற்றும் ரிச்சர்ட் ஹார்டி என்பவர்களை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.இதனையடுத்து 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் இன்று வரை சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது. எப்போதுமே நிகழ்ச்சியில் சேலை அணிந்து வந்த ராதிகா சரத்குமார் திடீரென அரை டவுசரில் போஸ் கொடுத்ததால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது போதாது என்று, இவர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்த நடிகர் ரகுமான் கமெண்ட் பக்கத்தில் கேட்ட கேள்வியைத்தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் ரகுமான் போட்டோவை பார்த்து நீங்க தனியாவா போயிருக்கீங்களா? யாரும் உங்க கூட வரவில்லையா? என்று கேட்டிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன ரகுமான் சார்… ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல? என்று கலாய்த்து வருகின்றனர்.