காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு நடிகை நயன் தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு

முன்பே இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார். அதன்பின் திருமணமாகி ஜவான் ஷூட்டிங்கினை தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.
சமீபத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.இதனடிப்படையில் நயன் தாராவின் லுக் மற்றும் ரோல் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் ஜவான் படத்தில் நடிக்கும் நடிகை நயன் தாராவின் நியூ லுக் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. ஆனால், அது நயன் தாராவின் லுக்கே இல்லை என்றும் ஏ ஐ நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.