Monday, March 10, 2025

அதிதி ஷங்கர் பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க..!

- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கடந்த 6ம் தேதி தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மாவீரன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்நிலையில், பிறந்தநாளை தான் எப்படி ஜோராக கொண்டாடினேன் என அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பர்த்டே செலிபிரேஷன் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

கார்த்தியின் விருமன் படத்தில் அறிமுகமான அதிதி ஷங்கர் விரைவில் வெளியாக உள்ள மாவீரன் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நிலையில், டாக்டர் ஆகாமல், அவங்க அப்பாவை போலவே சினிமா பக்கம் யூடர்ன் அடித்து வந்து விட்டார்.

தனது மகளின் ஆசைய நிறைவேற்ற நினைத்த ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் அதிதி ஷங்கரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.ஜூலை 6ம் தேதி 1997ம் ஆண்டு பிறந்த அதிதி ஷங்கர் தனது 26வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார்.

இந்நிலையில், பிறந்தநாள் செலிபிரேஷனில் எடுத்துக் கொண்ட அழகான போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த பிறந்தநாள் தனக்கு ரொம்பவே சூப்பரான பிறந்தநாளாக இருந்தது என நடிகை அதிதி ஷங்கர் போஸ்ட் போட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular