நடிகை ப்ரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முதன் முதலாக செய்தி வாசிப்பாளராக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர், சின்னத்திரையில் நுழைந்த சில தொடர்களில் நடித்தார். இதன் பிறகு சின்னத்திரையில் கிடைத்த புகழையடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 2017ம் ஆண்டு ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிவில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உட்பட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இதனையடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக இவருடைய நடிப்பில்‘ருத்ரன்’ படம் வெளியானது.
இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். அவ்வப்போது அழகான உடையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்.அந்த வகையில்,
தற்போது ப்ரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அழகான சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை மனதை கிறங்கடித்துள்ளது.இதோ அந்த புகைப்படம் –