நடிகை ஜனனி அய்யர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்தவர்.இவர் தனதுபடிப்பின் போது தனது மாடலிங் தொழிலை தொடங்கினார். ]இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் கால்பதித்தார்.பின்னர் அவன் இவன் அந்த திரைப்படத்தில் ஒரு முன்னணி பெண் வேடத்தில் நடிப்பதற்கு முன்பு 150க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார்.

தமிழில் வெளியான தெகிடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர்.தெகிடி படத்திற்கு முன்னர் திரு திரு துரு துரு என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார் ஜனனி ஐயர்.தெகிடி படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் ஜனனி ஐயர்.
அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.ஆரம்பம் முதல் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜனனி ஐயர் போட்டியின் இறுதிவரை சென்று வெளியேறினார்.சமீபகாலமாக பட வாய்ப்புகளின்றி
இருக்கும் இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.இவர் தற்பொழுது துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர அப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.