இளைய தளபதியின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதிக்கிறார்.அண்மைக்காலமாக திரைப்படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு சீரியல்களுக்கு கிடைத்து வருகின்றது.இதன் காரணமாக சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காத கலைஞர்கள் சின்னத்திரை பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளார்கள்.

அதிலும் சன்டிவி, விஜய் டிவி, ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.இதனால் அடிக்கடி இந்த தொலைக்காட்சிகளில் புதுப்புது சீரியல்களும் ஆரம்பித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் இளைய தளபதி விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் “ கிழக்கு வாசல்..” என்ற சீரியலின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், கதாநாயகியின் அப்பாவாக நடித்து வருகின்றார்.
ரேஷ்மாவின் அப்பாவாக களமிறங்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அப்படி என்ன பிரச்சினை சீரியல்களில் நடிக்கும் அளவிற்கு என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.விஜய் ரசிகர்களுக்கு இது புது விதமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது என கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.