புத்தளம் பிரதேசத்தில் கடந்த 28ஆம் திகதி இரவு இளம் அரசியல் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹிஷாம் மரிக்கார் என்ற இளைஞன் கடந்த மாதம் 16ஆம் திகதி கட்டாரில் இருந்து இந்நாட்டுக்கு வந்துள்ளார்.

இவர் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி தனது நண்பருடன் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளில் புத்தளத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இங்கு நண்பரின் மோட்டார் சைக்கிளை அவரது வீட்டின் முன் நிறுத்தி விட்டு அவர் செல்லும் போது இருவர் வந்து கட்டையால் தாக்கியுள்ளனர்.இதன்போது குறித்த இளைஞனின் கால்கள், கைகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அரசியல் செல்வாக்கு காரணமா அல்லது தனிப்பட்ட தகராறு காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை.இந்த தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கருத்து.