தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்றாலே லிஸ்டில் டாப்பில் இருப்பது நடிகர் கவுண்டமணி தான். 1964ம் ஆண்டு சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.அப்படத்திற்கு பிறகு 1965ல் ஆயிரத்தில் ஒருவன், 1967ல் செல்வ மகள் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இப்படியே பல படங்கள் நடித்து வந்தாலும் எப்போது செந்திலுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தாரோ அப்போது பிரபலமாக அறியப்பட்டார்.
இவருக்கு முதலில் பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் காமெடி தான். கவுண்டமணி அவர்கள் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார், அதில் 10 படங்கள் கதாநாயகளாக நடித்துள்ளார்.
காமெடி நடிகர் என்பதை தாண்டி வில்லன், குணச்சித்திர நடிகர் பல வேடங்களில் நடித்திருக்கிறார்.அவ்வப்போது சில படங்கள் நடித்து வரும் கவுண்டமணியின் லேட்டஸ்ட் க்ளிக் ஒன்று வெளியாகியுள்ளது.அதைப்பார்த்த ரசிகர்கள் நாம் பார்த்து ரசித்த கவுண்டமணியா இது, மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.