- Advertisement -
- Advertisement -
முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணி இன்று(06.07.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்,
இராணுவத்திடம் சரணடைந்த பெண் போராளிகளுடையதா? அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -