Wednesday, April 2, 2025

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை – 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது

- Advertisement -
- Advertisement -

வவுனியா A9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விருத்தினர் விடுதியில் விபச்சாரம் இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியில் திடீர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பாலியல் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20,34 வயதுடைய இரு பெண்களும் , போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபச்சாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்கள் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன் குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் விபச்சாரமானது முன்னாள் பொலிஸ் உயர்அதிகாரியின் பின்னணியில் இயங்குகின்றமையும் பொலிஸார் விசாரணைகளின் வெளியாகியுள்ளன.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular