Wednesday, April 2, 2025

எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

- Advertisement -
- Advertisement -

வவுனியா காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டது.குறித்த இளைஞரின் பெற்றோர் இன்றுகாலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்தநிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அயந்தன், வயது 23 என்ற இளைஞரே சாவடைந்துள்ளார்.அவர் இன்று காலை தொழிலிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடுதிரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular