தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் அடுத்ததாக மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்கே 21 படத்தில் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் எஸ் கே 21 திரைப்படத்திற்காக தனது லுக்கை முழுவதுமாக மாற்றியுள்ளார். தற்பொழுது இவர் தனது ரசிகை ஒருவருடன் லேட்டஸ்ட் மாஸ் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.