Friday, March 28, 2025

வடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்

- Advertisement -
- Advertisement -

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 8,000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2,000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய தினம் (04.07.2023) வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக் குறை காணப்படுகின்றது.அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாகக் காணப்படுகின்றார்கள்.

அதேபோல தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது.தற்போதுள்ள நிலையில், புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular