Monday, March 31, 2025

அட நம்ம சீரியல் நடிகைக்கு இவ்வளவு அழகான மகளா..? கதாநாயகியாக அறிமுகமாகும் தேவதர்ஷினி மகள்!

- Advertisement -
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகை தேவதர்ஷினியின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவயதிலேயே தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் தேவதர்ஷினி.பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் “கனவுகள் இலவசம்” என்ற சீரியலில் நடித்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து தேவதர்ஷினிக்கு சீரியல் வாய்ப்புகள் வர துவங்கியது.இதனை தொடர்ந்து மர்ம தேசம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். சீரியலில் நடிக்கும் பொழுது சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் சில சீரியல்களில் நடித்து வருவதுடன் வெள்ளத்திரையிலும் துணை கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவர்களுக்கு மகள் இருக்கிறார். அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “96”படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் தனது மகளின் கியூட்டான புகைப்படங்களை தேவதர்ஷினி வெளியிட்டுள்ளார்.புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் மகளை கதாநாயகியாக திட்டம் போடுகீறிர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular