Tuesday, April 1, 2025

நம்ம பிக் பாஸ் வனிதாவின் மகளா இது..? இவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே…? வைரலாகும் புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.இவர் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்றே கூறலாம். குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.

இதையெல்லாம் கடந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ரீ எண்ட்ரி கொடுத்தார்.அதனைத்தொடர்ந்து விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் கை தேர்ந்தவரான நடிகை வனிதா குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஆனார்.

இதைத் தொடர்ந்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சமையல், மேக்டிப்ஸ் குறித்த விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்.
இதற்கிடையில் யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் இவர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது தனது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட என பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.நடிகை வனிதா. இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடிய இவர் தற்பொழுது 14 வயதை எட்டிய தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular