Wednesday, April 2, 2025

60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த ‘கில்லி’ பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி… மணப்பெண் இவர்தானா..?

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர்1986 இல் கன்னடத்தில் வெளியான ‘ஆனந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஒடியா, ஆங்கிலம் என 11 மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.

பகவதி, தமிழன் படத்தில் விஜய்க்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி 2004ல் கில்லி திரைப்படத்தில் அப்பா ரோலில் நடித்து பட்டையை கிளப்பினர். தனுஷின் உத்தமபுத்திரன் படத்திலும் கலக்கலாக நடித்திருப்பார். இவர் தற்பொழுது பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

கடந்த சில வருடங்களாக இவர் தமிழில் நடிப்பதில்லை என்றாலும் ,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்பொழுதும் நடித்து வருகிறார். தற்பொழுது ஆசிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை இன்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவரது குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். திருமண புகைப்படங்கள் இணையத்தை வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர் Rajoshi Barua என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். தற்பொழுது நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular