- Advertisement -
- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸுக்காக தயாராகி வருகிறார்.அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறதாம்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சீதா ராமம் பட புகழ் நடிகை மிருனாள் தாகூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிருனாள் தாகூர் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்திலும், நானி ஜோடியாக Nani30 படத்திலும் நடித்து வருகிறார். அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒப்பந்தம் ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
- Advertisement -