அரவிந்த் சாமி ஒரு வளர்ப்பு மகன் என்றும், அவருடைய தந்தை குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். 1990களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. இவரின் அழகில் மயங்காத பெண்களே கிடையாது. எந்த பெண்ணிடமும் உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டால் யோசிக்காமல் அரவிந்த் சாமி தான் வேணும் என்று சொல்லிவிடுவார்கள். தமிழ் சினிமாவில் ஆண் அழகனாக பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அரவிந்த்சாமி. ஆரம்பத்தில் இவருக்கு மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார்.

பொழுதுபோக்கிற்காக மாடல் துறையில் நுழைந்தார். முதன் முதலாக இவர் நடித்த காபி விளம்பரத்தில் பார்த்த இயக்குநர் மணிரத்னம் ‘தளபதி’ படத்தில் பெரிய ஸ்டாரக வலம் வந்த ரஜினியின் தம்பியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றார்.இதனையடுத்து ‘ரோஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
கடந்த 1994ம் ஆண்டில் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.இந்நிலையில், பத்திரியாளர் செய்யாறு பாலு ஒரு சேனலில் நடிகர் அரவிந்த்சாமியை குறித்து பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். நிறைய வேர் சீரியல் தொடரில் நடித்த டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் தந்தை என்று சொல்வார்கள்.
ஆனால், உண்மையில் அரவிந்த்சாமியின் தந்தை வி.டி.சுவாமி தான். இவர் பெரிய தொழிலதிபர். இவருடைய மனைவி ஒரு பரதநாட்டிய கலைஞர். இவருடைய வளர்ப்பு மகன்தான் அரவிந்த் சாமி என்று கூறினார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இது குறித்து அரவிந்த் சாமியும் யாரிடமும் சொன்னதுகூட கிடையாது. அரவிந்தசாமி பிறந்ததும், டெல்லி குமார் அவருடைய உறவினரான வி.டி.சுவாமியிடம் தத்து கொடுத்து விட்டார் என்று சொல்கிறார்கள்.