80களில் முன்னணி நடிகையாக வலம்வந்த ரேகா தனது 53 வயதில் கர்ப்பிணியாக நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.தமிழில் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த நடிகை ரேகா பல முன்னணி நடிகர்களுடன் 80 களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து, புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, நினைவே ஒரு சங்கீதம், புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
பின்பு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர், சில சீரியல்களில் நடித்து வந்ததுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகும் மிரியம்மா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மிரியம்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரேகா கர்ப்பிணியாக இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.