Monday, March 31, 2025

நம்ம குஷ்புவா இது..? தலையில் துண்டுடன் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

இஸ்லாமியர்களுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய நடிகை குஷ்புவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குநர் சுந்தர் சி-யை கடந்த . 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

பின்னர் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு, அரசியலில் கால் பதித்து விட்டார்.அந்த வகையில் பாஜகவில்“ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக ” பணியாற்றி வருகிறார்.

இவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் பல சர்ச்சையான கருத்துக்கள் வரும் ஆனால் இவற்றிற்கு எல்லாம் சரியான பதிலடி கொடுத்து கொண்டு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதன்படி, இன்றைய தினம் உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறார்கள். நடிகை குஷ்புவும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிக்கு சென்றுள்ளார்.

அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இவ்வாறு பார்க்கும் போது குஷ்புவா இது? என நினைக்க வைக்கின்றது ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular