விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று குக் வித் கோமாளிச்சி. இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து கோமாளியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் சில மாதங்களுக்கு முன்னரே இந்நிகழ்ச்சியை விட்டு விலகினார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்பதை தற்பொழுது வரை அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகினார் என கூறப்பட்டது. இத்த தகவலும் தற்பொழுது வரை உறுதி செய்யப்படவும் இல்லை. சமீபத்தில் கூட அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் மணிமேகலை மிகவும் குண்டாக இருப்பதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மணிமேகலை தான் புதிதாக பண்ணை வீடு கட்டப் போவதாக கூறி பூஜை செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இதைத் தொடர்ந்து தற்பொழுது கட்டிட வேலைகள் நடைபெறும் இடத்திலிருந்து புகைப்படத்தை தனது கணவருடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
இந்த பதிவில் அவர் தனது வலப்புறம் கட்டிடத்தின் தூண் இருப்பதாகவும், இடப்புறம் வாழ்க்கையின் தூண் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய வீடா? என்று வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…