இங்கே இந்த துறையை சேர்ந்தவர்கள் பார்ட்டி, பப், குடி, கும்மாளம் என்று வாழ்வதே இல்லை என்று… யாரையும், எந்தவொரு துறையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த போதை, கேளிக்கை என்பது தனிப்பட்ட நபரின் சமாச்சாரமாக இருந்தாலும், அவர் ஒரு துறையில் உயர்ந்த இடத்தில் அல்லது மக்கள் அறியும் வகையிலான பிரபலமாக இருந்தால்.. அவரோடு சேர்ந்து அந்த துறைக்கும் அவப்பெயர் ஏற்படும்.

உதாரணமாக யாரேனும் ஒரு அரசியல்வாதி ஊழல் செய்தாலும், அது கட்சியையே பாதிக்கிறது அல்லவா, அதே போல. நடிகர், நடிகைகள் என்று வரும் போது, அவர்களை ஒரு ரோல் மாடலாக நினைத்து பின்பற்றும் ஒரு பெரும் கூட்டம் இந்தியாவில் இருக்கிறது.
ஆனால், அவர்களை ஒரு பொருளாதார சந்தையாக மட்டுமே காணும் சில பிரபலங்கள் ஊர் அறியும் படியாக சில கூத்துகளில் ஈடுபடுவதுண்டு.அப்படி நைட் பார்ட்டிகளுக்கு சென்று கேமரா கண்களில் சிக்கிய சில பிரபல இந்திய நடிகர், நடிகைகள

