தமிழ் சினிமாவில் உள்ள தொகுப்பாளினிகளில் டாப் லிஸ்ட் எடுத்தால் அதில் டாப் 5 வருபவர் அர்ச்சனா. இவரது சின்னத்திரை பயணம் இப்போது தொடங்கப்பட்டது இல்லை, பல வருடங்களுக்கு முன் தொடங்கியது.

20, 25 வருடங்களுக்கு முன்னரே இவரது தொகுப்பாளினி பயணம் தொடங்கி பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார்.இப்போது ஜீ தமிழில் தொடர்ந்து பணியாற்றி வரும் அர்ச்சனா எப்போதும் இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
அர்ச்சனா சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் தனது கணவருடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக விவாகரத்து வரை யோசித்தோம், பின் தனது மகள் சாராவினால் அந்த பேச்சை கைவிட்டோம் என கூறியிருந்தார்.
தற்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து சந்தோஷமாக இருக்கும் அர்ச்சனா பல வருடங்களுக்கு முன் தனது கணவருடன் எடுத்த போட்டோ மற்றும் இப்போது எடுக்கப்பட்ட போட்டோ என இரண்டையும் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.இதோ அவரது பதிவு,