விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர்நடித்திருந்தார்.தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார்.இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினி, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பிரியதர்ஷினி,சன், ஜீ ,விஜய் ,கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் 1000 கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.மேலும் கலைஞர் டி வி வழங்கியிருக்கிறார். ஒளிப்பாரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசையும் வென்றார்.
அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.பிரியதர்ஷினி ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.இதனிடையே பிரியதர்ஷினி தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் பிரியதர்ஷினி தற்போது தனது கணவருடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார்.அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.