90களில் கலக்கிய இப்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் பிரபலங்கள் குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது. அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் மந்த்ரா குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

இவர் விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ராசி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்தார். மந்த்ரா தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய 2014ம் ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் படு குண்டாக இருந்த மந்த்ரா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.தற்போது ஒரு விளம்பரத்திற்காக சென்னை வந்துள்ள நடிகை மந்த்ரா சுத்தமாக ஆளே மாறியிருக்கிறார்.
அதாவது உடல் எடை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குண்டாக இருந்தவரா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.