பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருபவர் தான் மாரிமுத்து மணிரத்னம்

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்னர் வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றி அதற்குப்பிறகு சில படங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு பலரையும் கோபப்படும் வகையில் தான் அவருடைய முகபாவனையும் ஒரு நிஜ கதாப்பாத்திரத்தைப் பார்ப்பது போல அமைந்திருக்கும்.ஆனால் சீரியலில் சீண்டி வருவது போல நிஜத்தில் இல்லையாம், நிஜத்தில் இவருக்கு அழகான குடும்பமும் அழகான மனைவியும் இருக்கிறார்.
இவர் காதல் கதைப் பற்றி தெரிந்துக் கொண்டால் முரட்டு ஆதிகுணசேகரனா இப்படி என்று ஆச்சரியப்பட்டு போவீர்கள். இவரைப் பற்றிய பல தகவல்களை இவரே சொல்லியிருக்கிறார் கீழுள்ள காணொளியில்,