செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அப்படத்திற்காக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அடுத்தடுத்து ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.

ஒருகடடத்தில் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது, பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்துகொண்ட அவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
காரணம் அந்த அளவிற்கு அவர் குண்டாக இருந்தார்.உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு எடுத்ததும் யோகா செய்தாராம், காலையில் 30 நிமிடம் கட்டாயம் சூரிய நமஸ்காரம் செய்வாராம். ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிட்டு வெறும் பழங்களை எடுத்து வந்துள்ளார்.
உணவின் அளவை குறைத்து நிறைய காய்கறிகள், மீன் ஆகியவற்றை எனர்ஜிக்காக எடுத்து கொள்வாராம். வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளில் உடற்பயிற்சி என்று அனைத்து வேலைகளையும் செய்து வந்தாராம்.சாப்பிட்ட பின்பு ஒரே இடத்தில் அதர கூடாதாம், முடிந்த வரை தலையில் சம்மணம் போட்டு தான் சாப்பிடுவாராம்.