குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே சுற்று இந்த வாரம் நடைபெறுகிறது. இதில் விசித்திரா, மைம் கோபி, கிரண், ஸ்ருஷ்டி மற்றும் சிவாங்கி என ஐந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் சிரிப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவத்தி என்ட்ரி கொடுத்து அனைவரும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.இந்நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபி மற்றும் விசித்திரா நல்ல மதிப்பெண்களை நடுவர்களிடம் இருந்து பெற்றார்கள்.
இதில் ஒருவர் தான் டிக்கெட் டு ஃபினாலே சுற்றை வெல்ல முடியும்.அதன்படி, இவர்கள் இருவரில் இருந்து குக் வித் கோமாளி 4ன் முதல் Finalist-ஆக நடுவார்களால் விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே விசித்திரா தான் டிக்கெட் டு ஃபினாலே வென்றுள்ளார் என செய்தி வந்த நிலையில், தற்போது இன்று ஒளிபரப்பான எபிசோட் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.