திடீரென உடல் எடையைக் குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருந்த ரோபோ சங்கர் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பி பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
ரோபோ சங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார். ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறி விட்டார்.மேலும், இவர் உடல் எடையை கொஞ்சம் குறைப்பதற்காக டயட்டில் இருந்த போது மஞ்சள் காமாளை நோய் வந்து உடல் எடை குறைந்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார். உடல் நிலை தேறி வருகின்ற போதுதான் தன் மகளுக்கும் திருமணம் செய்து வைக்க இருக்கதாகவும் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கோட்சூட் எல்லாம் போட்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கிறார். அதில் எடுத்துக் கொண்ட சூப்பரான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.