விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷாம் விஷால். அந்த சீசனுக்கு பிறகு இவர் மிகவும் பிஸியாகிவிட்டார்.

அதாவது வெள்ளித்திரையிலும் கால் பதித்து அசத்தினார். நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.தமிழில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் பாடியவர் ஷாம் விஷால் தான்.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றார்.அதில் இறுதி போட்டி வரை சென்ற இவர் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்னும் சொல்லப்போனால் பாட்டு பாடிய பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர்.அதேசமயம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளும் சிறப்பு அழைப்பாளராக இவர் கலந்து கொண்டு வருகிறார்.கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்த இவர் என்னடி மாயாவி பாடலை தத்ரூபமாக பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியிலும் இவர் இந்த பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்தார். மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது பல பாடல்களை பாடி வளர்ந்து வரும் பாடகர்களின் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ஷாம் விஷால் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.