நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.விடாமுயற்சி மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உண்மையாக்கி இன்று சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை வென்றார். இவரது கலகலப்பான பேச்சுக்கு, தொகுப்பாளர் பணி கிடைத்தது.இந்த தொகுப்பாளர் பணியை கெட்டியாக பிடித்து கொண்ட சிவகார்த்திகேயன், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடன திறமையையும் அசால்டாக வெளிப்படுத்தி டைட்டிலை வென்றார்.
3 படத்தில் தனுஷுக்கு நண்பராக காமெடி ரோலில் நடித்த சிவா, பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012ம் வெளியான மெரினா படம் மூலம் ஹீரோவாக மாறினார்.இவரின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்த படங்களை நடித்து வருகின்றார். இவர் நடிக்கும் மாவீரன் படம் அடுத்த மாதம் வெளியாகயுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகள் உள்ள நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஆண் குழந்தைஒ ன்று பிறந்துள்ளது. இவரது மகனிற்கு குகன் தாஸ் என்று பெயரிட்டுள்ள நிலையில், தற்போது வளர்ந்த மகனின் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.
குறித்த புகைப்படத்துடன், நடிகர் சிவகார்த்திகேயன் ‘நீ நடந்தால் நடை அழகு’ என்ற கேப்ஷனையும் சேர்த்துள்ளார். இந்த புகைப்படம் லைக்ஸைக் குவித்து வருவதுடன், வாழ்த்துக்களையும் பெற்று வருகின்றது.