தமிழ் திரை உலகில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக் கொண்டதால் இவர் தற்போது தனியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் முதலில் நடித்த செல்லமே திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்து பலரும் மிகப்பெரிய கமர்சியல் ஹீரோவாக வலம் வருவார் என்று கூறினர்.அதனைப் போலவே அவர் நடித்த தாமிரபரணி மற்றும் திமிரு உள்ளிட்ட அடுத்தடுத்து படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.ஆனால் கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.இவர் நடிக்கும் எந்த ஒரு படமும் ரசிகர்களை தவறாததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று உழைத்து வருகின்றார்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படமும் அவருக்கு மோசமான தோல்வியை கொடுத்தது.தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் விஷால் நடித்து வருகின்றார்.இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ் ஜே சூர்யா மற்றும் சுனில் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இதனிடையே நடிகர் சங்க பொது செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களது திருமணம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இவர்கள் திருமணம் நடைவில்லை பெறவில்லை.
அதே சமயம் விஷாலின் வருங்கால மனைவி அனிஷா விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது விஷாலுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியும் இருந்தார். இதனை தொடர்ந்து விஷாலின் திருமணம் நின்று விட்டது.தற்போது விஷால் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் விஷால் – அனிஷா நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.